சுவையான சிற்றுண்டி ரவை கிச்சடி ரெசிபி

Yummy Ravai Kichadi Recipe

காலை உணவுக்கு ஏற்ற ரெசிபி ரவை கிச்சடி இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு தம்ளர்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

முந்திரிப் பருப்பு - 10

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தக்காளி - 1

கேரட் - 1

பீன்ஸ் - 5

பட்டாணி - அரை கப்

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் ரவை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வதக்கவும்.

அத்துடன், நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அத்துடன், மஞ்சள் தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கியப் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர், கேரட், பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து கிளறி வேக வைக்கவும்.
இந்நிலையில், ஒரு கப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

இறுதியாக, ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

ரவை மற்றும் காய் நன்றாக வெந்து கெட்டியாகும்போது நெய்விட்டு கிளறி இறக்கிவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான பிரேக் ஃபாஸ்ட் ரவை கிச்சடி ரெடி..!

You'r reading சுவையான சிற்றுண்டி ரவை கிச்சடி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஸ்ஸலின் மீண்டும் ஒரு அதிரடி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்