செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

மணி ரத்னம் இயக்கும் 'செக்க சிவந்த வானம்' படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் புதிதாக உருவாக இருக்கும் படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தில், சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

You'r reading செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கைக்கு எட்டியது..வாய்க்கு எட்டவில்லையே.. ரூ.8 கோடி பரிசு வென்ற இளைஞர் தற்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்