தி அயன் லேடி: ஜெயலலிதாவாக நித்யா மேனன்.. சசிகலாவாக வரலஷ்மி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுக்க கடும் போட்டிகள் நிலவி வந்தன. மதராசாபட்டினம் படத்தை இயக்கிய விஜய், மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் வேறு சில இயக்குநர்களும் தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படையாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது மிஸ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ’தி அயன் லேடி’ எனும் தலைப்பில் மக்களால் ‘அம்மா’ என அழைக்கப்பட்ட தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் பயோபிக் வெளிவரவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

இந்த படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க, நடிகை நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். சசிகலாவாக நடிகை வரலஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜெயலலிதாவாக நடிக்க நடிகை த்ரிஷா, மஞ்சிமா மோகன் ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இயக்குநர் விஜய், பாலிவுட் நடிகை வித்யா பாலனை ஜெயலலிதா கேரக்டரில் வைத்து படம் எடுக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார். அந்த படம் குறித்த தகவல் எப்போது வெளியாகும் எனவும், அதிமுக அரசு இப்படத்திற்கு அனுமதி வழங்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்!

You'r reading தி அயன் லேடி: ஜெயலலிதாவாக நித்யா மேனன்.. சசிகலாவாக வரலஷ்மி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புரட்டாசி மாத வெயிலுக்கு சாப்பிட வேண்டிய உணவு?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்