வில்லன் வேடத்தில் சித்தார்த்!

sidharth acting as villain

விக்ரம் குமார் இயக்கும் படத்தில் வில்லனாக சித்தார்த் நடிக்கயிருக்கிறார்.

பாய்ஸ் சித்தார்த், அவள் படத்திற்கு பிறகு கம்மர சம்பவம் என்னும் படத்தில் நடித்தார். தற்போது, சைத்தான் கா பட்சா என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும், விக்ரம் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

எந்த கதையாக இருந்தாலும் தனது சோலோவான நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் சித்தார்த்துக்கு இந்த படம் ஒரு வரமாக அமையும் என்பது உறுதி.

யாவரும் நலம், 24 போன்ற தமிழ் படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் தற்போது நானியை வைத்து இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்காக கெட்டப் மாற்றி நடிக்கிறாராம் சித்தார்த்.

தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தெலுங்கு படத்தில் வெயிட்டான வில்லன் ரோல் வந்ததால் நடிக்க சம்மதித்துள்ளாராம்

You'r reading வில்லன் வேடத்தில் சித்தார்த்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் ஸ்ரீகாந்துடன் இணையும் ராய்லட்சுமி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்