பிரியங்கா நிக் ஜோனஸ் திருமண வரவேற்பில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Prime Minister Modi participation at Priyanka Nick Jonas wedding reception

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமண வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விஜய்யின் தமிழன் படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா, பின்னர், பாலிவுட்டில் பல படங்களில் முன்னணி நாயகியாக கலக்கியவர். பாலிவுட் பார்த்தாச்சு அடுத்தது ஹாலிவுட் என அங்கேயும் தனது புகழை நிலை நாட்டினார்.

தேசிய விருதுகளை வென்றுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் இளம் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வந்தார். பிரியங்காவை விட 10 வயது குறைவான இளைஞரை அவர் காதலிப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

ஆனால், அந்த விமர்சனங்களை காதில் ஏற்றிக் கொள்ளாத நடிகை பிரியங்கா, தனக்கு பிடித்த காதலனை இந்த டிசம்பர் 1ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், டிசம்பர் 2ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.

ஜோத்பூர் அரண்மனையில் அரச திருமணமாக பயங்கர பொருட்செலவில் பிரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் வெடிக்கப்பட்ட வாணவேடிக்கைகள் ஜோத்பூர் நகரத்தின் இரவையே பிரகாசமாக்கியது.

இந்நிலையில், நேற்று டில்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மற்றும் ஹாலிவு பிரபலங்கள் என பலர் கலந்து கொண்ட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

You'r reading பிரியங்கா நிக் ஜோனஸ் திருமண வரவேற்பில் பிரதமர் மோடி பங்கேற்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்று கடைசி போட்டி: ஓய்வை அறிவித்தார் கெளதம் கம்பீர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்