சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?

சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையை குறைக்க

சர்க்கரை நோய் உள்ளவர்களின் எடையைக் குறைக்க சிறந்த மருந்து வெள்ளரிக்காய் ஆகும். சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் பலன் தெரியும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு.

இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. மேலும் விட்டமின்களான பி1, பி5 மற்றும் பி7 உள்ளன.

மருத்துவ பயன்கள்

காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள்.

அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.

சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும்.

இதனால் ஆண்மை பெருகும். வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கு வறட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் – 50 கிராம் தயிர் – 100 மி.லி மிக்ஸியில் அடித்து உப்பு, மிகப் பொடிதாக நறுக்கிய புதினா, குடமிளகாய் சேர்த்து ருசிக்கலாம்!

பயன்கள்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும்.அதோடு இந்த ஜூஸ் சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையைக் குறைக்கிறது.

மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும்.

குறிப்பு

நுரையீரல் கோளாறுகள், கப இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லதல்ல.

You'r reading சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாலத்தீவுக்கு புதிய அதிபர் - இந்தியாவுக்கு நன்மையா ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்