5 சீட்டுதான் பைனல்! பாமகவிடம் கறார் காட்டிய அதிமுக!

AIADMK finaly says PMK to only 5 Seats

பாமகவோடு எடப்பாடி பழனிசாமியின் சேலம் ஆதரவுப் புள்ளி கறார் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். 7 சீட்டுகளாவது உறுதியாக வேண்டும். அதற்குக்கீழ் இறங்கி வந்தால் எங்களுக்குத்தான் இழுக்கு' என ஜிகே.மணி தரப்பில் இருந்து பேசியுள்ளனர்.

இதற்கு பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர், ஸ்டாலின் மனநிலை என்னவென்று உங்களுக்கே தெரியும். அவருக்குப் பிடிக்காதவர்களை அவர் எப்போதும் உடன் வைத்துக் கொள்ள மாட்டார். உங்களை அழைப்பது சுயமரியாதைக்கே இழுக்கு என ஆ.ராசா மூலமாக கேட்டை மூடிவிட்டார்.

இனி எந்தக் காலத்திலும் திமுக கதவுகள் உங்களுக்காகத் திறக்கப் போவதில்லை. உங்கள் ஆட்களும், திமுகவோடும் பேசி வருகிறோம் என்கிறார்கள். அதையும் நாங்கள் கவனித்துக் கொண்டுதான் வருகிறோம்.

உங்கள் செல்வாக்கின் அடிப்படையில் 5 சீட்டுகளே போதும் என நினைக்கிறோம். அந்த 5 தொகுதிகளுக்குமான செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆட்சிக்கு எதிராகப் பேச வேண்டாம் என நாங்கள் வைத்த வேண்டுகோளை ஏற்றுச் செயல்பட்டு வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் மரியாதை குறையாத அளவுக்கு சீட்டுகளைக் கொடுக்கிறோம்' எனக் கெடுபிடி காட்டினாராம்.


-அருள் திலீபன்

 

அதிமுகவுக்கு ராமதாஸ் தேவையா? போர்க்கொடி தூக்கும் வடமாவட்ட மா.செக்கள்

You'r reading 5 சீட்டுதான் பைனல்! பாமகவிடம் கறார் காட்டிய அதிமுக! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாரத ரத்னா விருதை நிராகரிப்பதாக கூறிய பூபென் ஹசாரிகா மகன் பல்டி - விருது பெறுவது கனவு போல் உள்ளது என அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்