சசிகலா மீது வழக்கு தொடரப்படும்: சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தகவல்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது வழக்கு தொடரப்படும் என சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணித்தார். இது அதிமுக தொண்டர்களை தொண்டர்களிடம் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுகவில் உறுப்பினரே அல்ல அவர் அதிமுக கூடிய பயன்படுத்தக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் டிடிவி தினகரனோ அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாதான் இருக்கிறார் என்பதால் அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் இருக்கிறது என்று பெங்களூரில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக இதுபற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர் இது குறித்து செய்தியாளர்களிடம்ர பேசிய சட்ட அமைச்சர் சிவி சண்முகம் சசிகலா கட்சியிலேயே இல்லை.

தவறாக, சட்டவிரோதமாக அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார். சசிகலா அதிமுக கொடியோடு தமிழகத்தில் நுழைந்தால் விட மாட்டோம். உண்மையான அதிமுக நாங்கள்தான் அது நீதிமன்றமே சொல்லி உள்ளது. 30 ஆண்டுகாலம் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் எங்களை ஏமாற்றி விட்டனர். இனி ஏமாற்ற முடியாது ஏமாற்ற விட மாட்டோம். அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது வழக்கு தொடரப்படும் என்றார்.

You'r reading சசிகலா மீது வழக்கு தொடரப்படும்: சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்ள அதிமுக திடீர் நிபந்தனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்