இளைஞர்களுக்கு வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கும் பங்கு – ரெடியானது திமுக அமைச்சரவை லிஸ்ட்!

திமுக அமைச்சரவையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சீனியர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸிட்போல் தொடங்கி அனைத்து கருத்துகணிப்புகளும் திமுக தான் ஆட்சி வரும் என்பதை உறுதிபடுத்தியுள்ளன. இந்நிலையில், ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்ய வேண்டும், யார்யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ``நாளை முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மே 6ம்தேதி காலை 11 மணி அல்லது மே 9ம் தேதி காலை பதவி ஏற்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்திலேயே , தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ப்பார்.

அதேபோல, கடந்த சில நாள்களுக்கு முன்பாகவே, அமைச்சரவைப் பட்டியலும் தயாராகிவிட்டது, இந்தமுறை சீனியர்களில் மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படவுள்ளது, கடந்தமுறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலருக்கு இந்தமுறை அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படமாட்டாது, மாற்றுப் பதவிகள் வழங்கப்படும்.

சீனியர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். அனைத்து சமூகங்களையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் அமைச்சரவை இருக்கும். குறிப்பிட்ட, முக்கியமான சில துறைகள் இளைஞர்கள் வசம் ஒப்படைக்கப்படும். ஆனால், ஒரு வருடத்தில் அமைச்சரவை மாற்றம் என்பது நிச்சயமாக இருக்கும். கலைஞரின் அமைச்சரவையைப் போல, ஒருவரே ஐந்தாண்டுகளுக்கு முழுமையாக நீடிக்க முடியாது.

வடக்கில் வன்னியர், பறையர், தெற்கில் முக்குலத்தோர், பள்ளர், மேற்கில் கவுண்டர், அருந்ததியர் என சமூக வாக்குகள் நிலத்துக்கு ஏற்றார் போல சிதறிக் கிடக்கிறது. அதுவே இஸ்லாமிய சமூக வாக்குகள் மாநிலம் தழுவிய அளவில் உள்ளது. தி.மு.க சார்பில் போட்டியிட்ட 173 வேட்பாளர்களில் ஆவடி நாசர், செஞ்சி மஸ்தான் மற்றும் பாளையங்கோட்டை அப்துல் வஹாப் ஆகிய மூவர்தான் இஸ்லாமிய வேட்பாளர்கள். இவர்களில் நாசருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது. உருது பேசும் முஸ்லீம்கள் பலரும் ஓவைசிக்கு வாக்களிக்காமல் பலரும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்

அதனால், இந்த முறை உருது முஸ்லீம் ஒருவருக்கும் கேபினட்டில் இடம் கொடுக்கப்படும். .அப்படி பார்க்கும்போது நாசரும், அப்துல் வஹாபும் தமிழ் இஸ்லாமியர்கள் என்றால் செஞ்சி மஸ்தான் உருது இஸ்லாமியர். அதனால், ஒரு தமிழ் இஸ்லாமியருக்கும், ஒரு உருது இஸ்லாமியருக்கும் கேபினட்டில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற குரல் கேட்கிறது.

அதேபோல பட்டியல் சமூகத்தவரில் தேவேந்திரகுல வேளாளர், பறையர், அருந்ததியர் என முன்று சமூகங்களிலும் தலா ஒருவருக்கு அமைச்சரவை அல்லது துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது. மேலும் அமைச்சரவையில் பல புதுமைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார்கள். .

You'r reading இளைஞர்களுக்கு வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கும் பங்கு – ரெடியானது திமுக அமைச்சரவை லிஸ்ட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்