பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல்முறையாக சீனா பயணம்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதை அடுத்து, வரும் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக சீனா செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் ஆபார வெற்றியுடன் புதிய பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான், பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். தொடர்ந்துண, அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில், வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல்முறையாக சீனாவுக்கு செல்ல இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சீனா & பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் ஒரு சிறந்த திட்டம். இந்த திட்டத்தை விரைவில் முடிப்பதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காக பிரதமர் இம்ரான்கான் முதல்முறையாக சீனாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் தொழில்துறை வளர்ச்சி, வேளாண் உற்பத்தி, நாட்டின் வறுமை ஒழிப்பு போன்றவற்றிற்கு பயன்படும் என்றார்.

You'r reading பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல்முறையாக சீனா பயணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விமர்சனம்: ராட்சசன் விஷ்ணு விஷால் அடிச்ச சிக்ஸர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்