இடைத்தேர்தல் எதிரொலி: 20 தொகுதிகளுக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

Appointment of ADMK Authorities 20 constituencies bypoll

விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமனம் செய்தனர்.

அவர்களின் விவரம் கீழே வருமாறு:

பெரம்பூர் தொகுதி: மதுசூதனன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், விஜிலா சத்தியானந்த், பாலகங்கா, சத்யா, வி.என்.ரவி உள்ளிட்டோர் நியமனம்.

திருவாரூர் தொகுதி: அமைச்சர் காமராஜ், கோபால், ஜெயபால் உள்ளிட்டோர் நியமனம்.

தஞ்சை தொகுதி: வைத்திலிங்கம், துரைக்கண்ணு, எஸ்.வளர்மதி, தாமரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நியமனம்.

ஆம்பூர் தொகுதி: கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, நிலோபர் கபில், செஞ்சி ந.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நியமனம்.

அரவக்குறிச்சி தொகுதி: தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் நியமனம்.

குடியாத்தம் தொகுதி: அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட 6 பேர் நியமனம்.

விளாத்திகுளம் தொகுதி: அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 6 பேர் நியமனம்.

திருப்போரூர் தொகுதி: அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 9 பேர் நியமனம்.

சாத்தூர் தொகுதி: தளவாய் சுந்தரம் உள்பட 5 பேர் நியமனம்.

சோளிங்கர் தொகுதி: அமைச்சர் சம்பத் உள்பட 5 பேர் நியமனம்.

மானாமதுரை தொகுதி: செங்கோட்டையன், பாஸ்கரன், கோகுல இந்திரா, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் நியமனம்.

அரூர் தொகுதி: பொன்னையன், கே.சி.அன்பழகன், வி.சரோஜா, கருப்பணன் உள்ளிட்டோர் நியமனம்.

ஆண்டிபட்டி தொகுதி: ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், ஜக்கையன், விஜயபாஸ்கர், எஸ்.பி.எம். சையதுகான், ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் நியமனம்.

திருப்பரங்குன்றம் தொகுதி: ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், பா.நீதிபதி உள்ளிட்டோர் நியமனம்.

நிலக்கோட்டை தொகுதி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 5 பேர் நியமனம்.

பாப்பிரெட்டிபட்டி தொகுதி: அமைச்சர் அன்பழகன் உள்பட 4 பேர் நியமனம்.

பரமக்குடி தொகுதி: ஓ.எஸ்.மணியன் உள்பட 5 பேர் நியமனம்.

ஒட்டப்பிடாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜு உள்பட 5 பேர் நியமனம்.

பூவிருந்தவல்லி தொகுதி: அமைச்சர் பெஞ்சமின் உள்பட 10 பேர் நியமனம்.

பெரியகுளம் தொகுதி: ஓபிஎஸ், முருகுமாறன், சுப்புரத்தினம் உள்ளிட்டோர் நியமனம்.

You'r reading இடைத்தேர்தல் எதிரொலி: 20 தொகுதிகளுக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்