குழந்தைகளுக்கு பிடித்த பாசிப் பருப்பு ஃபிரை ரெசிபி

Moong Dal Fry Recipe

குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - 150 கிராம்

மிளகாய்த் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், பாசிப் பருப்பு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை நன்றாக கழுவவும்.
பிறகு, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தண்ணீரை நன்றாக வடிகட்டியப் பிறகு, பருப்பை ஒரு துணியின் மீது போட்டு உலர்த்தவும்.

ஈரப்பதம் முழுவதுமாக சென்றப்பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

சிறிய துகள்கள் கொண்ட வடிகட்டியை எடுத்து அதில், பருப்பை போட்டு எண்ணெய்யில்விட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்த பருப்பை பௌலில் போட்டு, விரும்பியவர்கள் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சாப்பிடலாம்.

அவ்ளோதாங்க.. பாசிப் பருப்பு ஃபிரை சாட் ரெடி..!

You'r reading குழந்தைகளுக்கு பிடித்த பாசிப் பருப்பு ஃபிரை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நான்காவது வெற்றிபெறுமா சென்னை? - சொதப்பல் பீல்டிங்க்கு மத்தியில் 170 ரன்கள் சேர்த்த மும்பை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்