சுலபமா ஆப்பம் செய்யலாம் வாங்க..

Appam Recipe

வீட்டிலேயே ரொம்ப சுலபமா ஆப்பம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2கப்

புழுங்கலரிசி - 1 1/2 கப்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

அவல் - கால் கப்

முழு உளுந்து - ஒரு ஸ்பூன்

ஆப்ப சோடா மாவு - கால் டீஸ்பூன்

தேங்காய் பால்

சர்க்கரை

ஏலக்காய்

உப்பு

செய்முறை:

முதலில், பச்சரிசி, புழுங்கலரிசியை தனித்தனையாக ஊற வைக்கவும்.

வெந்தயம், அவல், உளுந்து ஆகிய மூன்றையும் தனியாக ஊற வைக்கவும்.

இவற்றை, சுமார் நான்கு மணி நேரம் அளவுக்கு ஊற வேண்டும்.

பிறகு, வெந்தயம், உளுந்து, அவல் மூன்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். உளுந்து அரைத்தவுடன் நடுவில் அரிசியைப் போட்டு அரைக்கவும்.

ஒருவேளை வீட்டில் அவல் இல்லை என்றால் வடித்த சாதத்தை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்தெடுத்த மாவுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து சுமார் 8 மணி நேரம் குறைந்தது பாத்திரத்தில் வைக்கவும்.

எட்டு மணி நேரம் கழித்து மாவு புளித்து அதை உறுதி செய்தபின் சிறிதளவு தேங்காய் பாலை மாவுடன் கலக்கவும். அத்துடன், ஆப்ப சோடா மாவு கால் டீஸ்பூன் கலந்து, தோசை மாவு போல் இல்லாமல் அதனை விட சற்று தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.

ஆப்பக் கடாயை அடுப்பில் வைத்து சூடான பின், இரண்டு கரண்டி அளவிற்கு மாவை எடுத்து அப்ப கடாயில் ஊற்றவும்.

தேவைக்கேற்ப எண்ணையை ஆப்பத்தை சுற்றி ஊற்றி மூடியை எடுத்து ஆப்ப கடாயை மூடவும். ஆப்பம் வந்த பின் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய் ஆகியவை கலந்து ஆப்பத்துடன் சேர்த்துசாப்பிட்டாலாம்.
அவ்ளோதாங்க.. சுவையான ஆப்பம் ரெடி..!

You'r reading சுலபமா ஆப்பம் செய்யலாம் வாங்க.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்தி மீன் குழம்பு ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்