சுவையான சீஸ் பராத்தா ரெசிபி

Yummy CHeese Paratha Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான சீஸ் பராத்தா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மைதா - அரை கப்

கோதுமை மாவு - அரை கப்

சீஸ் துருவல் - ஒரு கப்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும். இதனை, காற்று புகாக டப்பாவில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பீய்த்து எடுத்து உருண்டைகளாக்கி சப்பாத்தி போன்று விரித்துக் கொள்ளவும்.

அதன்மீது, நெய் தடவி நடுவில் சீஸ் துருவலை வைத்து நான்கு பக்கமாக மூடி மீண்டும் விரிக்கவும்.

தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், பராத்தாவை போட்டு நெய்விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சீஸ் பராத்தா ரெடி..!

You'r reading சுவையான சீஸ் பராத்தா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியர்களின் ஆன்லைன் மோகம்: அடோப் நிறுவனம் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்