ரகசியமா வெச்சிக்கோங்க.. சுவையை அள்ளிக்கொடுக்கும் பிரியாணி மசாலா ரெசிபி

Flavoured Biriyani Masala Recipe

பிரியாணிக்கு முக்கியமே மசாலா தாங்க.. அப்படி ஒரு அட்டகாசமான மசாலாவை கொஞ்சம் சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் கமகமக்கும்.. இந்த சீக்ரட் பிரியாணி மசாலாவை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

நட்சத்திர சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்

பிரியாணி இலை - 6

பட்டை - 5

கிராம்பு - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன்

ஜாதிக்காய் - 3

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

தனியா - 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்யவும்.

அதில், நட்சத்திரப் பூ, பட்டை, பிரியாணி இலை, பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கிராம்பு, தனியா, மிளகு சேர்த்து மிதமாக வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதனை ஆறவைத்ததும், மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

அவ்ளோதாங்க.. கமகமக்கும் பிரியாணி மசாலா ரெடி..!

ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவும், ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவும், மீன் பிரியாணிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவும், குஸ்கா, முட்டை பிரியாணிக்கு முக்காய் டேபிள் ஸ்பூன் மசாலா அளவும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

You'r reading ரகசியமா வெச்சிக்கோங்க.. சுவையை அள்ளிக்கொடுக்கும் பிரியாணி மசாலா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேசத்துரோக வழக்கு ; வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்