ரோட்டு கடை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

how to make kothu parotta in tamil

ஊரடங்கினால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.இதனால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர்.தினமும் என்ன சமைக்கலாம் என்று குழம்பி உள்ள தாய்மார்களுக்கு இந்த சமையல் குறிப்பு மிகவும் பயன்படும்.ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்.

தேவையான பொருள்கள்:-

பரோட்டா-2

முட்டை-1

வெங்காயம்-2

எண்ணெய் -4 ஸ்பூன்

தக்காளி-1

பச்சை மிளகாய் -2

உப்பு-தேவையான அளவு

பூண்டு-8 பல்

கறிவேப்பிலை-ஒரு கொத்து

கொத்தமல்லி-தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்

கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்

தனி மிளகாய் தூள்-1 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் பரோட்டாவை செய்து வைத்து கொள்ளவேண்டும்.பிறகு அதை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொத்தமல்லி ஆகியவை சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்கு வதக்கவும்.நன்றாக வதக்கிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.

தேவையான அளவு உப்பு,கரம் மசாலா,தனி மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும் .10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறுது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தாயார்.இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்.

You'r reading ரோட்டு கடை கொத்து பரோட்டா செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முகரம் ஊர்வலத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்