குண்டு குண்டு கார குழி பணியாரம் செய்வது எப்படி??குளிர்காலத்திற்கு எற்ற டிபன்!!

how to make kuzhi paniyaram in tamil

நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம்..இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்.பணியாரத்தில் நிறைய வகைகள் உள்ளன…அதில் நாம் காரசாரமான பணியாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!!!!

தேவையான பொருள்கள்:-

தோசை/இட்லி மாவு-3 கப்

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-2

உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்

மிளகாய் தூள் -1சிட்டிகை

பெருங்காயம்-1சிட்டிகை

தேங்காய் -1 ஸ்பூன்

கருவேப்பிலை-தேவையான அளவு

உப்பு-தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு

கொத்தமல்லி-தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் தோசை அல்லது இட்லி மாவுடன் வெங்காயம்,காரத்திற்கு பச்சை மிளகாய்,உளுத்தம் பருப்பு,மிளகாய் தூள்,பெருங்காயம்,துருவிய தேங்காய்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மாவை மிருதுவாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு பணியாரம் செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் சூடாகிய பிறகு மாவை குழியில் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.10 நிமிடத்தில் கார குழி பணியாரம் ரெடி.

ரெடியான காரசாரமான பணியாரத்தை தட்டில் வைத்து அதன் மேல் வாசனைக்காக கொத்தமல்லியை அலங்கரித்து குழந்தைகளுக்கு பரிமாறுங்கள்.

You'r reading குண்டு குண்டு கார குழி பணியாரம் செய்வது எப்படி??குளிர்காலத்திற்கு எற்ற டிபன்!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த வருஷம் விற்பனை ரொம்ப மோசம்.... தோவாளை பூ வியாபாரிகள் கலக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்