பத்தே நிமிடத்தில் வெயிலை விரட்டும் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி??

how to make cucumber pachadi in tamil

வெயிலில் வேலை செய்து சோர்வாக வரும் கணவருக்கு குளிர்ச்சியாக வெள்ளரிக்காய் பச்சடி கொடுத்து பாருங்கள் 10 நிமிடத்தில் வெப்பம் எல்லாம் சென்று உடல் முழுவதும் குளுமையாக இருக்கும்..இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-

துருவிய வெள்ளரிக்காய்-2

துருவிய தேங்காய்-1 கப்

எண்ணெய்-2 ஸ்பூன்

தயிர்-1 கப்

சீரகம்-1 ஸ்பூன்

கடுகு-1 ஸ்பூன்

கறிவேப்பிலை-சிறிதளவு

பச்சை மிளகாய்-6

பெருங்காயம்-தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை:-

மிக்சியில் துருவிய தேங்காய்,பச்சை மிளகாய்,கடுகு,சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவை சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடாகிய பிறகு அதில் கடுகு,சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தாளித்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் துருவிய வெள்ளரிக்காய் மற்றும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

கடைசியில் தாளித்த பொருள்கள் மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும்.வெயிலுக்கு இதமான,குளிர்ச்சியான,வெள்ளரிக்காய் பச்சடி தயார்….

You'r reading பத்தே நிமிடத்தில் வெயிலை விரட்டும் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காமெடி நடிகை திடீர் திருமண நிச்சயதார்த்தம்.. உடலை குறைத்தது இதுக்குதானா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்