ஈஸியா சமைக்கக்கூடிய முட்டை சாதம் ரெசிபி இதோ..

எளிமையாகவும், ருசியாகவும் செய்யக்கூடிய முட்டை சாதம் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:

வெங்காயம் – ¾ கப் பொடியாக நறிகியது
எண்ணெய் – 2 ½ கப்
காரட் – ½ கப்
பட்டாணி – ½ கப்
முளை கட்டிய பயறு – 1 கப்
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
முட்டை – 1 – 2
நல்லெண்ணெய் - 1 /4 தேக்கரண்டி
சிக்கன் எலும்பில்லாதது – 1 கப் வேக வைத்தது
வெங்காயத் தாள் – 4 சாதம் – 4 கப் (வேக வைத்து)

செய்முறை:

அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப்பதம் குறையும் வரை வறுத்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, குறைந்தது 4 - 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும். சிக்கனை எலும்பு இல்லாமல் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும்.
கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.. முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.

கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக பொறித்து எடுத்துக்அதை கொள்ளவும் கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும். எக் சிக்கன் ப்ரைடு/ முட்டை சாதம் தயார்.

You'r reading ஈஸியா சமைக்கக்கூடிய முட்டை சாதம் ரெசிபி இதோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 11ம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு கட்டாயபடுத்தி டிசி வழங்கக்கூடாது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்