இனிப்பான அட்டகாசமான பேரீச்சைப்பழ சட்னி.

ஒரு முறை இந்த பேரீச்சை சட்னியை செஞ்சி சாப்பிடுங்க

புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி என எத்தனையோ வகையான சட்னிகளை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த புதுமையான பேரீச்சை சட்னியை சாப்பிட்டு இருக்கமாட்டீர்கள். ஒரு முறை இந்த பேரீச்சை சட்னியை செஞ்சி சாப்பிடுங்க, அதன்பிறகு விடவே மாட்டீர்கள்.

தேவையான பொருட்கள்:

பேரீச்சை             -          கொட்டை நீக்கியது 5-6

புளி                  -          ஒரு நெல்லிக்காய் அளவு

துருவிய வெல்லம்    -          3 டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி       -          1 டீ ஸ்பூன்

பெருங்காயம்         -          ஒரு சிட்டிகை

உப்பு                 -          2 டீ ஸ்பூன்

செய்முறை:

புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பேரீச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள். அடிகனமான வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.

வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடுங்கள்.

கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித்ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.

இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

வட இந்திய உணவுகளுக்கு டிரெஸ்ஸிங் ஆகவும், சமோசா போன்றவற்றிருக்கும் சாஸ் மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

You'r reading இனிப்பான அட்டகாசமான பேரீச்சைப்பழ சட்னி. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆசிய கோப்பை: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்