ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி

Yummy Vannila Cup Cake Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்ணிலா கப் கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அனைத்திற்கும் உபயோகமாகும் மாவு - ஒன்றரை கப்

பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்

வெண்ணெய் - ஒரு கட்டி

சர்க்கரை - ஒரு கப்

முட்டை - 3

வெண்ணிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்

பால் - முக்கால் கப்

உப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அனைத்திற்கும் பயன்படும் மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

அத்துடன், மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அதன்பிறகு, வெண்ணிலா எசன்ஸ் கலந்ததும், சலித்த மாவு பாதியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

பின்னர், பால் சேர்த்து கலந்து மீண்டும் மீதமுள்ள மாவு சேர்த்து கேக் மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

இந்த கலவையை மஃபின் கப்களில் ஊற்றி பின்னர், சூடு செய்த ஓவனில் 180 டிகிரி செல்சியசில் 20 நிமிடங்களுக்கு வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான வெண்ணிலா கப் கேக் ரெடி..!

You'r reading ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்