நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??

இப்பொழுது கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இஞ்சி, பூண்டுகளை சேர்த்த உணவுகளை தான் பரிந்துரை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இஞ்சியில் இயற்கையாகவே ஆரோக்கிய குணம் உள்ளதால் செரிமானம் போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது. எப்படி இஞ்சி சட்னி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
இஞ்சி-1/2 கப்
கடலை பருப்பு-2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-5
கறிவேப்பிலை-சிறிதளவு
புளி-தேவையான அளவு
வெல்லம்-1ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
கடுகு-சிறிது

செய்முறை:-
முதலில் இஞ்சியை தண்ணீரில் நன்கு அலசி சிறு சிறு தூண்டுக்ளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இஞ்சியை வதக்கிய பிறகு அதில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு வதக்கிய பொருளுடன் சிறிதளவு புளி கரைசல், மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்க வேண்டும்.

பின்னர்,ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்ற வேண்டும். பத்தே நிமிடத்தில் ஆரோக்கியமான இஞ்சி சட்னி தயார்…

You'r reading நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளவரசிக்கு அபராதம் செலுத்தியது யார்.. வெளியானது விவரங்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்