மிகவும் சிம்பிளான ஸ்டைலில் வேர்க்கடலை காரக்குழம்பு செய்வது எப்படி??

வேர்க்கடலையில் சட்னி, துவையல் முதலிய ரெசிபிகள் செய்வதுண்டு. இன்று புதிய முறையில் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
வேர்க்கடலை - 1/2 கப்
தேங்காய் துண்டு - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
புளிக்கரைசல் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய்த்தூள் - 11/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:-
முதலில் வேர்க்கடலையை நன்றாக அலசி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதலில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த வேர்க்கடலை, புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும். குழம்பு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான வேர்க்கடலை குழம்பு தயார்.

You'r reading மிகவும் சிம்பிளான ஸ்டைலில் வேர்க்கடலை காரக்குழம்பு செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10 வருட சினிமா பயணம்: விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் பரிசு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்