புத்தாண்டை இனிப்புடன் வரவேற்றுங்கள்..! சுவையான பொரிகடலை உருண்டை செய்வது எப்படி??

இந்த ரெசிபி இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கருப்பட்டி பொரிகடலை என்றாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு இதனின் சுவை இருக்கும். கர்நாடகத்தில் இது புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது. இதனை கர்நாடக மொழியில் தம்புட்டு என கூறுவர். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டமாக திகழ்கிறது. இதனை மிகவும் எளிதான முறையில் செய்துவிடலாம். கருப்பட்டி பொரிகடலை எப்படி செய்வது குறித்து பார்ப்போம்..

செய்முறை:-
அரிசி மாவு-1/2 கப்
பொரிகடலை-1/2 கப்
தேங்காய் துருவல்-1/2 கப்
நிலக்கடலை-1/2 கப்
வெல்லம்- 3/4 கப்
முந்திரி-5
உலர்ந்த திராட்சை-5
நெய்-1/2 கப்
தண்ணீர்-1/4 கப்
ஏலக்காய்-4

செய்முறை:-
ஒரு கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதே கடாயில் பொரிகடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக 1-2 நிமிடம் வறுக்க வேண்டும். வறுத்த கலவையை மிக்சியில் கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் வேறொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து வெல்லம் முழுவதும் கரையும்படி சூடுபடுத்தவும். பிறகு அரைத்த கடலை கலவை, நெய், அரிசி மாவு, உலர்ந்த திராட்சை போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். கிளறிய மாவை உருண்டையாக உருட்டினால் சுவையான கருப்பட்டி பொரிகடலை உருண்டை தயார்.

You'r reading புத்தாண்டை இனிப்புடன் வரவேற்றுங்கள்..! சுவையான பொரிகடலை உருண்டை செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பணிக்காக இதுவரை ரூ.7,544 கோடி செலவு... முதல்வர் பழனிசாமி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்