உடலுக்கு ஆரோக்கியம் தரும் தாமரை விதையின் பங்களிப்பு..!

தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி. தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். சரி வாங்க தாமரை விதையில் எப்படி மசாலா ப்ரை பண்ணலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
தாமரை விதை-100 கிராம்
வறுத்த வேர்க்கடலை-3/4 கப்
மிளகு தூள்-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிதளவு
நெய்-1 1/2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் உற்ற வேண்டும். நெய் காய்ந்தவுடன் அதில் வேர்க்கடலை, கருவேப்பிலை சேர்த்து மொறு மொறுப்பாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு தாமரை விதையை கடாயில் சேர்த்து 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் வருக்க வேண்டும்.

விதைகள் பொன்னிறமாக மாறியவுடன் அடுப்பை அனைத்து விடவும். மசாலா மக்கானா எனும் தாமரை விதையை சூடாக பரிமாறி சுவைத்திடுங்கள். தாமரை விதை உடல் ஆரோக்கியத்தை மேலும் கூட்டும் தன்மையுடையது.

You'r reading உடலுக்கு ஆரோக்கியம் தரும் தாமரை விதையின் பங்களிப்பு..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிராமண சமூகத்திற்கென தனி டோர்னமென்ட்... ஐதராபாத் கிரிக்கெட் சர்ச்சை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்