குழந்தைகளை மயக்க தயிர் சாண்ட்விச் செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க உங்களையே சுத்தி சுத்தி வருவாங்க..

இன்னும் பள்ளிகள் திறக்காத வேளைகளில் உங்கள் பிள்ளைகளை கையில் பிடிக்க முடியவில்லையா?? கவலையை விட்டு தள்ளுங்கள். குழந்தைகளை ஈஸியாக மடக்க அவர்களுக்கு பிடித்த உணவை செய்து கொடுத்து அசத்துங்கள். அதுவும் தயிர் சாண்ட்விச்னா குழந்தைகளுக்கு ரொம்ப இஷ்டம். சரி வாங்க தயிர் சாண்ட்விச்சை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
ரொட்டி-4
தயிர் -1 கப்
சோளம்- 1/4 கப்
முட்டைக்கோஸ்- 1/4 கப்
கேரட்- 1/4 கப்
குடை மிளகாய்- 1/4 கப்
சர்க்கரை தூள்- தேவையான அளவு
உப்பு- தேவியான அளவு
மிளகு- தேவையான அளவு

செய்முறை:-
முதலில் 1 கப் தயிர் எடுத்து கொண்டு அதலில் படிந்திருக்கும் தேவை இல்லாத தண்ணீரை நீக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு தூளாக அரைத்த சர்க்கரை, உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து கலக்கவும். ரொட்டியை எடுத்து அதனின் சுற்று பகுதியில் இருப்பதை நீக்கிவிட்டு கலந்த தயிர் கலவையை ரொட்டியில் வைக்கவும். அதனை மேல் இன்னொரு ரொட்டியை வைத்து மூடினால் சுவையான தயிர் சாண்ட்விச் தயார். இதனை தக்காளி சாஸுடன் சாப்பிடால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்

You'r reading குழந்தைகளை மயக்க தயிர் சாண்ட்விச் செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க உங்களையே சுத்தி சுத்தி வருவாங்க.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்