105 வயதிலும் பிஸியாக இருக்கும் பாப்பம்மாள் பாட்டி.. விவசாயம், அரசியல் எல்லாம் இவருக்கு அத்துப்படி..

இந்த காலத்தில் 50 வயதை தாண்டுவது என்பது மிகவும் கடினம். ஆனால் நமது பாப்பம்மாள் பாட்டிக்கு வயது 105 கடந்தும் யாரும் அசைக்க முடியாத இரும்பு பெண்மணியாய் திகழ்கிறார். இன்றும் பல மடங்கு ஆரோக்கித்துடனும் மனதளவில் இளமையாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். முகத்தில் அழகான சுருக்கம், உதட்டின் ஓரம் எப்பொழுதும் தாண்டவமாடும் கள்ளக்கபடமில்லாத புன்னகை. இவை தான் அனைவரையும் கவர்ந்து இவர் பக்கம் இழுக்கிறதோ?? இந்த வயதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மரியாதை கொடுத்து சான்றோராக திகழ்கிறார். இவர் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு 3 வயது ஆகும் பொழுதே தனது குடும்பத்துடன் இந்த பூமிக்கு தஞ்சம் அடைய வந்தவர்.

அந்த பூமியிலே சொந்தமாக வீடுகட்டி குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இவரின் சிறு வயதில் இருந்து இவருக்கு உறுதுணையாக இருந்தது இவரது பாட்டி தான். இவரது பாட்டியின் உதவியால் சிறு மளிகை கடை தொடங்கி அது நாளுக்கு நாள் வியாபாரமும் நன்றாக பெருக்க ஆரம்பித்தது. 20 வயதில் இவரது பெற்றோர்கள், உறவினர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். ஒரு பக்கம் ஹோட்டல் கடை இன்னொரு பக்கம் ஏக்கர் கணக்கில் பல இடங்களை வாங்கி விவசாயமும் செய்து வந்துள்ளார். இவரது ஆரோக்கியத்தின் ரகசியம் என்னவென்று சொன்னால் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது இவர் சிறு வயதில் இருந்து தினமும் ராகி, கம்பு, சோளம், வரகு, சாமை போன்ற உணவுகளை தான் உணவாக சாப்பிடுவார்களாம். பண்டிகை காலம் வந்தால் மட்டுமே அரிசி பொங்கி சாப்பிடுவோம்.

அதுவோம் ஒரு வேளை தான் சாப்பிடுவோம் என்று அவரது ஆரோக்கியத்தின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். இப்பொழுது சாப்பிடும் பொழுது கூட இரண்டு இட்லி, ஒரு தோசை போல அளவாக சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். இவரது குறிப்பில் இருந்து 'அளவாக சாப்பிட்டால் நீண்ட காலம் வாழலாம்' என்பதை கற்றுக்கொள்ளலாம். பாப்பம்மாள் பாட்டிக்கு விவசாயம் மட்டும் அல்ல அரசியலும் தெரியுமாம். அது மட்டும் இல்லாமல் இவருக்கு கலைஞர் என்றால் மிகவும் பிடிக்குமாம். இவர் கலைஞரை சந்திப்பதற்குள் அவர் தவறிவிட்டார் என்று மிகவும் வருத்தப்பட்டார். இருப்பினும் ஸ்டாலினை சந்தித்து நமது கட்சியை வளர்க்க நான் அரும்பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளார். இவர் அக்ரி விவாத குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் பாட்டிக்கு நமது அரசாங்கம் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கவுள்ளது.

You'r reading 105 வயதிலும் பிஸியாக இருக்கும் பாப்பம்மாள் பாட்டி.. விவசாயம், அரசியல் எல்லாம் இவருக்கு அத்துப்படி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போலீசின் தடுப்பு வேலிகள் தகர்ப்பு விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்