தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது Dream11!

இணைய வழி விளையாட்டுகளில் மிக பிரபலமானது Dream11 செயலி. இந்த செயலியின் மூலம் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், ஹேண்ட் பால், ஹாக்கி மற்றும் அமெரிக்கன் ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளின் போட்டியின் போது, அணியில் இடம்பெறும் குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கி அந்த அணியின் மீது குறிப்பிட்ட தொகையை வைத்து ஆட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ஒரு குறிப்பிட்ட கணிசமான தொகை பரிசாக வழங்கப்படும். இந்த செயலியில் 10 ரூபாய் முதல் பல ஆயிரம் வரை முதலீடு செய்யலாம். பல்வேறு விதமான போட்டி அமைப்புகளும் இதில் உள்ளன.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. இந்த செயலியில் உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை என் அனைத்து போட்டிகளும் இடம்பெறும். மேலும் இதில் வெற்றி பெறும் நபர்களுக்கான தரவரிசை பட்டியலும் அவ்வப்போது வெளியிடப்படும். இந்த செயலியும் இணையவழியிலான சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக இருந்தாலும் இதுநாள் வரை இந்த செயலியை தமிழக அரசு தடை செய்யவில்லை. சமீபத்தில் இணையவழி சீட்டாங்களை தடைசெய்த போது கூட Dream11 செயலியை தடை செய்யவில்லை. இந்த செயலியின் மூலம் விளையாட்டுகளின் மீதான ஆர்வத்தையும், விளையாட்டு திறன் மற்றும் உத்தியை ஊக்குவிக்கலாய் என்று அதற்கு காரணம் சொல்லப்பட்டது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. அதில் இணையவழி சூதாட்டத்தை ஊக்குவிக்கும் அனைத்து செயலிகளையும் தடை செய்ய முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்வரைவு மாநில விளையாட்டு சட்டத்தில் திருத்தம் செய்த பிறகு, அந்த தடை Dream11 க்கும் பொருந்துமா? என்பதனை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை இந்த செயலி தற்காலிகமாக தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த செயலியை ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், ஒடிசா, தெலுங்கானா, நாகலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தடைசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது Dream11! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போக்குவரத்துக்கு இடையூறு செய்த திருமண வீட்டினர் தட்டிக் கேட்ட வாலிபர் அடித்துக் கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்