நவராத்திரியின் எட்டாம் நாளில் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

Navratri Eight Day Celebration

தொடர்ந்து ஏழு நாட்கள் அம்பிகையை அலங்கரித்து அவளின் திரு அருளைப் பெற்றோம். இன்று நவராத்திரியின் எட்டாவது நாள் அம்பிகையை எப்படி அலங்கரித்து எவ்வாறு அவளை வழிபட்டு அவள் திருவருளை பெறுவது என்பதைப் பார்ப்போம்.

இன்று அன்னையை நரசிம்மகி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.

வழிபடும் முறை:

வடிவம் : நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

பூஜை : 9 வயது சிறுமியை மகா கௌரியாக பூஜிக்க வேண்டும்.

திதி : அஷ்டமி.

கோலம் : பத்ம கோலம்

பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

You'r reading நவராத்திரியின் எட்டாம் நாளில் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மணல் அள்ளுவதற்கு லஞ்சம் - விருத்தாச்சலம் வட்டாட்சியர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்