ஒன் டே தொடரிலும் மேற்கிந்தியாவை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

Will India make whitewash Westindies One Day Series

இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது. நாளை இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த மேற்கிந்திய அணி, 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை நாளை முதல் சந்திக்கிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் பலம் வாய்ந்து காணப்படுகிறது.

ஜேகன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்ததால், ஒருநாள் போட்டியில் தங்களின் முழு பலத்தை வெளிப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

இந்திய அணியில், ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, தோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல்அகமது ஆகியோர் உள்ளனர்.

மிடில் ஆர்டர் வரிசையில் அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, ரி‌ஷப் பண்ட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குல்தீப் யாதவ், சாகுல் இருப்பதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம்தான். இந்தியா வலிமையாக உள்ளதால் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர்.

பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர்ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.

மேற்கிந்திய அணியை குறைத்து மதித்து விட முடியாது. அந்த அணி திடீரென்று எழுச்சி பெற்று சிறப்பாக விளையாட கூடியது.

இதனால் இந்தியா எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். இப்போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி:

விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ்பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது.

மேற்கிந்திய அணி:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ்.

டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் போட்டி தொடரையும் இந்தியா 5-0 என வெல்ல வாழ்த்துகள்!

You'r reading ஒன் டே தொடரிலும் மேற்கிந்தியாவை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாத்தாவின் உடலை எரித்த சாம்பலில் பிஸ்கட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்