இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி- மேற்கிந்தியாவை வீழ்த்துமா இந்தியா

India play against West Indies Third ODI

இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடக்கிறது.

மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றி கோப்பையை வென்றது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறமுடியாமல் ஆட்டத்தை சமன் செய்தது.

இதனால், இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணியே ஒருநாள் போட்டி தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும் நிலை உருவாகி உள்ளது.

தொடர் தோல்விகளை சமாளிக்கும் விதமாக மேற்கிந்திய அணி வலுவான பேட்டிங்கை செயல்படுத்தி வருகிறது.

இந்திய அணியிலோ யாராவது ஒருவர் மட்டுமே ஆடும் நிலை மீண்டும் உருவாகியுள்ளதால், வெற்றியை ஈட்ட, அனைவரும் இணைந்து பாடுபட வேண்டிய நிலை உள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்கள் மேலும், தங்களது திறமையை வலுவாக மேற்கிந்திய அணிக்கு எதிராக காட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணியால் கைப்பற்ற முடியும்.

புனேயில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ள போட்டி, இருநாட்டு ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம்.

இந்திய அணி:

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், சாஹல், லோகேஷ் ராகுல், கலீல் அகமது, உமேஷ் யாதவ், மணிஷ் பாண்டே.

மேற்கிந்திய அணி:

சாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), கெய்ரன் போவெல், சந்திரபால் ஹெம்ராஜ், மர்லன் சாமுவேல்ஸ், ஷிம்ரன் ஹெட்மெயர், ரோவ்மன் போவெல், ஆஷ்லி நர்ஸ், கெமர் ரோச், தேவேந்திர பிஷு, ஓபட் மெக்காய், சுனில் அம்ப்ரீஸ், ஃபேபியன் ஆலன், கீமோ பால், ஓஷானே தாமஸ்.

You'r reading இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி- மேற்கிந்தியாவை வீழ்த்துமா இந்தியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூரியன் அஸ்தமனமாகிவிட்டதால் ஸ்டாலின் கனவு பலிக்காது- தம்பிதுரை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்