டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Tennis star Sania Mirza gave birth to baby boy

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா (31). இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்த சானியா மிர்சா ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

டென்னிஸ் நட்சத்திரமான சானியாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் விளையாடி வந்த சானியா சமீபத்தில் கர்ப்பமானார்.

இந்நிலையில், சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை சோயிப் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சானியா மிர்சாவுக்கு அவரது ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

You'r reading டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாணவர்களை தவறான உறவுக்கு வலியுறுத்தல்: பீஹாரில் ஏழு பேர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்