நேற்று அதிமுக... இன்று மீண்டும் அமமுக.. அடுத்தடுத்து தாவும் ராமதாஸ் மீது செம கடுப்பில் அன்புமணி!

Yesterday the AIADMK ... Today again the Ammk .. Next and then on Ramadas In a angry anbumani!

மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் கூட்டணிகுறித்து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் அதை வெளிப்படையாக அறிவிப்பேன் - பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த வாக்கியங்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள் அமமுகவினர்.

'அவர் சொல்வது தினகரனைத்தான். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து யுக்திகளையும் அவர் யோசித்து வருகிறார். அதிமுகவோடு இடப்பங்கீடு முடிந்தாலும் கடைசிகட்ட வாய்ப்புகளை ஆலோசித்து வருகிறார் ராமதாஸ்.

ஒருவேளை தினகரன் பக்கம் காற்று வீசினால் அவர் பக்கம் சாய்ந்துவிடுவாராம். பாமகவோடு செட்டில்மெண்ட்டும் பேசி வருகிறார் தினகரன்' எனவும் தகவல்களைக் கசிய விடுகின்றனர்.

ஒரேநேரத்தில் திமுக, அதிமுக, அமமுக எனப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிமுகவோடு சமரச உடன்பாட்டுக்கு வந்தார் அன்புமணி. இப்போது சிங்கம், செம்மறியாடு என ராமதாஸ் சொல்லும் உதாரணத்தைப் பார்த்துக் கடும் கொதிப்பில் இருக்கிறாராம் அன்புமணி.

You'r reading நேற்று அதிமுக... இன்று மீண்டும் அமமுக.. அடுத்தடுத்து தாவும் ராமதாஸ் மீது செம கடுப்பில் அன்புமணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேறவழியே இல்லை... அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் ஜிகே வாசன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்