முரசொலி விளம்பரங்களில் மு.க.ஸ்டாலின் பெயருக்கு தடை ஒன்லி தலைவர், பாசத் தலைவர், கழகத் தலைவர், அன்புத் தலைவர்!

MK stalin name is banned in Murasolis promotions only leader, affectionate leader, at the head, the head of a loved one!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் விளம்பரங்களில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்தமால் அடைமொழிகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது அவரது பெயர் முரசொலியின் விளம்பரங்களில் இடம்பெறுவது உண்டு. அவர் எந்த தடையையும் விதிக்கவில்லை.

கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக தலைவரானார் ஸ்டாலின். அப்போது முரசொலியில் ‘மு.க.ஸ்டாலின்’ என குறிப்பிட்டு எழுதாமல் தலைவர் என்றுதான் எழுதப்பட வேண்டும் என கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதை திமுக தரப்பு மறுத்தது.

தற்போது முரசொலியின் விளம்பரங்கள் அனைத்திலும் ஸ்டாலின் என்கிற பெயர் இடம்பெறாமல், கழகத் தலைவர், பாசத் தலைவர், அன்புத் தலைவர் என்கிற அடைமொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading முரசொலி விளம்பரங்களில் மு.க.ஸ்டாலின் பெயருக்கு தடை ஒன்லி தலைவர், பாசத் தலைவர், கழகத் தலைவர், அன்புத் தலைவர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரசு ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு வைத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: எஸ்.வி. சேகர் ‘கொலவெறி’ ட்வீட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்