பாமக கூட்டணி குறித்து ஊடகங்களில் தவறான தகவல்- ராமதாஸ் கடும் கண்டனம்

Dr Ramadoss slams Media on Alliance issue

லோக்சபா தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்து ஊடகங்களில் தவறான தகவல் வெளியாவதாக அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:

மக்களவைத் தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்து தவறான செய்திகளை தயாரித்து வெளியிடுவதையே சில ஊடகங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. யாருடைய கட்டளையை நிறைவேற்ற அவை அவ்வாறு செய்கின்றன?

ஊடகங்கள் ஊடக தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்; தரகு வேலை செய்யக்கூடாது.

இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

You'r reading பாமக கூட்டணி குறித்து ஊடகங்களில் தவறான தகவல்- ராமதாஸ் கடும் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மம்தா கருத்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்