என்னது பாஜகவோடு கூட்டணியா? ஆடித் தீர்த்த ஜி.கே.வாசன்!

GK Vasan closed door to BJP alliance

அதிமுக, பாஜக கூட்டணிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணையலாம் என்ற கருத்தால், முகத்தைக் கடுகடுவென வைத்திருக்கிறாராம் ஜிகேவாசன். இதைப் பற்றிக் கட்சி நிர்வாகிகளிடம் கோபத்தைக் காட்டியிருக்கிறார்.

'இன்னும் எந்தக் கட்சியோடும் நாம் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. நமக்கென்று மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் செல்வாக்கு இருக்கிறது.

நம்முடைய நேர்மையை யாராலும் அசைத்துவிட முடியாது. 1998ம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியைக் கலைத்தவர் நமது அய்யா மூப்பனார். மதச்சார்பற்ற கொள்கையில் இருந்து நாம் என்றுமே விலகியது கிடையாது.

நம்மைப் போய் மோடியோடு கூட்டணி சேருவார் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கொள்கையை அடமானம் வைத்துக் கொண்டு அப்படியொரு கூட்டணியை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் நமக்குக் கிடையாது.

நமக்கான கூட்டணி நல்லபடியாக அமையும்' என ஆடித் தீர்த்துவிட்டாராம் ஜி.கே.வாசன்.

You'r reading என்னது பாஜகவோடு கூட்டணியா? ஆடித் தீர்த்த ஜி.கே.வாசன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தினகரன் பிரிக்கப் போகும் வாக்குகள்? அச்சத்தில் திமுக, பாமக!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்