வீரமரணம் அடைந்தோருக்கான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கா? எடப்பாடி பேச்சால் வெடிக்கும் சர்ச்சை

Controversy erupts on CM Edappadi Palanisamy speech ove Abhinandan

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் முன்னாள் ராணுவத்தினர்.

இதைப் பற்றிப் பேசும் முன்னாள் ராணுவ நல வீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், '' போரின் போது வீரதீரச் செயல்கள் செய்து இறந்தவர்களுக்கு மட்டுமே பரம்வீர் சக்ரா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கான தகுதிகளாக மத்திய அரசு சில சட்டதிட்டங்களை வகுத்திருக்கிறது.

எதிரி நாட்டுடன் நடக்கும் போரில் வீரதீரத்துடன் போரிட்டு சண்டை போடுபவர்கள், தரையிலேயே நிலத்திலோ கடலிலோ நடக்கும் போர்களில் அசகாய சாதனைகளைச் செய்து உயிர்த் தியாகம் செய்பவர்களை கௌரவிப்பது வழக்கம்.

இந்த நடைமுறைகளை அறியாமல், அபிநந்தனுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார் முதல் அமைச்சர். இதுதொடர்பாக அவருக்கு அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

மொத்தத்தில் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறது எனத் தெரியவில்லை' என்கின்றனர் ஆதங்கத்துடன்.

- அருள் திலீபன்

You'r reading வீரமரணம் அடைந்தோருக்கான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கா? எடப்பாடி பேச்சால் வெடிக்கும் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மமக டமால்? தினகரன் பக்கம் ஜவாஹிருல்லா! ஸ்டாலின் பக்கம் ஹைதர் அலி- இன்று க்ளைமாக்ஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்