திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்

சென்னை: தீவிர அரசியலில் குதித்திருக்கும் கமல், பல்வேறு அரசியல் தலைவர்களை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், வரும் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்களில் ஈடுப்பட உள்ளார். இதுதொடர்பான, சுற்றுப்பயண விவரத்தையும் கமல் வெளியிட்டிருந்தார். அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, அரசியல் தலைவர்களை கமல் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், கமல் நேற்று மாலை நடிகர் ரஜினியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். நட்பு ரீதியான சந்திப்பு என கூறிய கமல் தனது மதுரை கூட்டத்தில் ரஜினி பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஜினியை தொடர்ந்து நேற்று இரவு கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் கமல்.

இதுகுறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசியல் பயணத்துக்காக திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ் மற்றும் தமிழக மக்களின் பால் உள்ள அக்கறை ஆகியவை கண்டு வியந்திருக்கிறேன்.

எனது கொள்கையை திமுக புரிந்த பிறகு கூட்டணி குறித்து யோசிக்கலாம். 21ம் தேதி அரசியல் பயணம் செய்ய இருக்கிறேன். அதற்கு முன் எனக்கு பிடித்தவர்களிடம் சொல்லிட்டு செல்கிறேன் ” என்றார். கமலின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாஜ்மஹாலிலிருந்து தொடங்கிய ஜஸ்டின் ட்ரூடே: ஒரு வார இந்திய சுற்றுப்பயணத்தில் கனடா பிரதமர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்