ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணா

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளதால், ஆலையை மூடும்படி அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடையுள்ள நிலையில், மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தும், மற்றொரு ஆலையை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மே 12-ல் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்