2021ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்களை அறிவித்தது தமிழக அரசு!

ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் 2021 ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. அவையாவன.

2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!

1.ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை, ஆங்கில புத்தாண்டு

2.ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை, பொங்கல்.

3.ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை, திருவள்ளுவர் தினம்.

4.ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை, உழவர் திருநாள்.

5.ஜனவரி 26ம் தேதி செவ்வாய்க்கிழமை, குடியரசு தினம்.

6.ஏப்ரல் ஒன்றாம் தேதி, வியாழக்கிழமை, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு.

7.ஏப்ரல் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை, புனித வெள்ளி.

8.ஏப்ரல் 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருட பிறப்பு.

9.ஏப்ரல் 14ஆம் தேதி புதன்கிழமை, தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்.

10.ஏப்ரல் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி.

11.மே 1ம் தேதி சனிக்கிழமை மே தினம்.

12.மே 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ரம்ஜான்.

13.ஜூலை 21 ஆம் தேதி புதன்கிழமை பக்ரீத்.

14.ஆகஸ்ட் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம்.

15.ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மொகரம்.

16.ஆகஸ்ட் 30-ஆம் தேதி திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி.

17.செப்டம்பர் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி.

18.அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி.

19.அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை, ஆயுத பூஜை.

20.அக்டோபர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விஜயதசமி.

21.அக்டோபர் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மிலாதுநபி.

22.நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை, தீபாவளி.

23.டிசம்பர் 25ஆம் தேதி, சனிக்கிழமை கிறிஸ்துமஸ்.

இதற்கான அரசாணை கீழை இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/10/GO-554-holidays-Tamil-(1).pdf

You'r reading 2021ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்களை அறிவித்தது தமிழக அரசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனியார் ஹோட்டலில் ஆலோசனை.. நிதின் கட்காரியை சந்திக்கும் எடப்பாடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்