துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை : குழு அமைத்தது தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது புகார்கள் வந்ததாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள சூரப்பா பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு பெருமுயற்சி செய்து வந்தார். தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசிடம் நேரடியாக இதுகுறித்த நடவடிக்கை களில் அவர் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கூறப்பட்ட போதிலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதன் மூலம் அடிபட்டு போய்விடும் பல்கலைக்கழகமும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் கைகள் சென்றுவிடும் என்று தமிழக அரசு கருதியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

அதேபோல் கொரானா கால ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருப்பின் கடைசி செமஸ்டர் தவிர மற்ற தேர்வுகளில் உள்ள அரியர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்ததற்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது இந்த முட்டுக்கட்டைக்கு காரணமாக இருந்ததே சூரப்பா தான் என்றும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு விமர்சனங்கள் சூரப்பா மீது எழுந்தன. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசுக்கு அளிக்கும் என்று உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

You'r reading துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை : குழு அமைத்தது தமிழக அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதைப் பொருள் வழக்கில் மகன் கைது.. சிபிஎம் மாநில செயலாளர் ராஜினாமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்