திடீர் இயக்கத் தடை விதித்தது.. மத்திய நிதித்துறை லட்சுமி விலாஸ் பாங்க் செயல்படுவதில் சிக்கல்

லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை சில கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியாவில் 20 மாநிலங்களில் மொத்தகம் 566 கிளைகளும் 918 ஏடிஎம்களும் உள்ளன. இந்த வங்கி சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்குக் வணிக ரீதியான கடன்களை வழங்கி வந்தது. நாளடைவில் இந்த வங்கி பெரிய நிறுவனங்களுக்கும் கடன் வழங்க தொடங்கியது. அது முதல் இந்த வங்கிக்கு கெட்ட நேரம் ஆரம்பமானது என்று சொல்லாம மெல்ல மெல்ல கடன்கள் வாராக்கடன் அதிகரித்தது. 2017 ஆம் வருடத்தில் 2.67 சதவீதமாக இருந்த. ராக்கடன்கள் ஆனால் 2020இல் 26.39 சதவீதமாக அதிகரித்தது. அதே சமயம் வங்கியின் வைப்புத் தொகை 31,000 கோடியில் இருந்து 21,000 கோடியாகச் சரிந்தது.

வங்கியின் இநத மோசமான நிலையால் கடந்தக் செப்டம்பர் மாதம் இந்த கியை ரிசர்வ் வங்கி பி சி ஏ திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வந்து விட்டதால் இந்த வங்கியால் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி கடன்களை அளிக்கவோ பெரிய அளவில் வைப்புத் தொகையைப் பெறவோ முடியாத நிலை உருவானது. மேலும் வைப்புநிதி மோசடி வழக்கு ஒன்று பதியப்பட்டு வங்கியின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் நெருக்கடியில் சிக்கி உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு மேலும் ஒரு சிக்கல் ஏறபத்துள்ளது. மத்திய நீதித்துறை இந்தக் வங்கிக்கு இயக்க தடை வி தித்துள்ளது. இதன்படி இந்த வங்கியின் சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் ஒரு வாடிக்கையாளர் அதிக பட்சம் 25 ஆயிரம் ரூபாய்தான் எடுக்க முடியும் . அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்க முடியாது. ஒரு வாடிக்கையாளருக்க கு பல கணக்குகள் இருந்தாலும் மொத்தம் ரூ.25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.

லட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிமாண்ட் டிராட்டுகள், பண முறிவுகள் போன்றவற்றுக்குப் இனி பணம் அளிக்கப்பட மாட்டாது. மேலும் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப் பத்திரங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. ஏற்கனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை இனிமேல் அனைத்து வகை கடங்களுக்கும் அமல்படுத்தப்படுகிறது.

You'r reading திடீர் இயக்கத் தடை விதித்தது.. மத்திய நிதித்துறை லட்சுமி விலாஸ் பாங்க் செயல்படுவதில் சிக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டி.வி வாங்கும் மாணவர், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்