ஸ்டாலின் கொடுத்தது பொய் புகார் : முதல்வர் ஆவேசம்

முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழலை மறைக்கவே எங்களது அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:கொரோனா காலத்தில் ரங்கராஜன் கமிட்டி பரிந்துரை செய்ததின் அடிப்படையில் தான் எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படுகிறது. அதே கமிட்டியின் பரிந்துரைகளின் ஒன்றான புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க நிலம் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கேஸ் விலை உயர்வைக் குறைக்கக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளோம். கொரோனா காலத்தில் மத்திய அரசு கூடுதலாக நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ அரிசி வழங்கக் கொடுத்தது. இதில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை. இதற்காக மத்திய அரசு நிதி உதவியுடன் கூடுதலாக 1351 . 5 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியது.

முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் இருப்பதினால் அதனை மறைப்பதற்காகவே எங்களது அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இது ஆதாரமற்றது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் மக்கள் முக கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். அரசு வகுத்த வழிகாட்டு முறைகளைப் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.

You'r reading ஸ்டாலின் கொடுத்தது பொய் புகார் : முதல்வர் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனைவியால் பெருசுகளின் சேட்டை படம் தயாரித்த நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்