அதிரடிக்கு தயாராகிறாரா மு.க.அழகிரி ?

அறிவித்தபடி வரும் 3 ஆம் தேதி மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மு.க.அழகிரி.அதில் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களை ஜனவரி 3 ஆம் தேதி பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ்க்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மு.க.அழகிரியின் இந்த ஆலோசனைக் கூட்டம் அன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடக்க உள்ளது.

தென் மாவட்டங்களில் திமுகவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கோலோச்சிக் கொண்டிருந்த மு.க. அழகிரி கலைஞர் மறைவிற்குப் பிறகு ஓரம்கட்ட ஓரம்கட்டப்பட்டார். ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஆகிவிட்ட நிலையில் கட்சியில் அவருக்கு எந்த பதவியும் அளிக்கப்படாத நிலையில் அவரும் இத்தனை காலம் அமைதியாக இருந்து வந்தார். இதனிடையே அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்றும் ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியில் இணைவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதற்கு அழகிரி தரப்பிலிருந்து எந்தவித ரியாக்சனும் இல்லை.

இதனிடையே நேற்று முன்தினம் சென்னை கோபாலபுரம் வந்த அழகிரி தனது தாயாரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்: சட்டசபைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வருகிற 3-ந் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன். ஆதரவாளர்கள் கூறும் கருத்துக்களை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன். தி.மு.க.வில் மீண்டும் சேரும்படி எனக்கு எந்த அழைப்பும் இல்லை. தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் திட்டமிட்டபடி தனிக்கட்சி துவங்க இதுகுறித்து ஆலோசனை நடத்தத் தனது ஆதரவாளர்களுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் அழகிரி அவரது இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

You'r reading அதிரடிக்கு தயாராகிறாரா மு.க.அழகிரி ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விக்ரம் தலையில் சுழலும் டிஜிட்டல் எண்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்