ஐந்து நாள் ஆலோசனை. அப்புறம்தான் அறிவிப்பு : சரத்குமார் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பது குறித்து ஐந்து நாட்கள் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வருகின்ற ஜனவரி 22ஆம் முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கேட்ட பின் அறிவிக்கப்படும் எனக் காஞ்சிபுரத்தில் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : அரசியல் கட்சி தொடங்க வில்லை என
ரஜினிகாந்த் அவருடைய சொந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவருடைய அரசியல் நிலைப்பாட்டைக் குறித்து எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை. அவருடைய உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்க வேண்டும். அவருடைய கலை உலக பயணமாக இருந்தாலும் சரி அவருடைய எந்த முயற்சி ஆனாலும் சரி அது சிறப்பாக அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து வருகின்ற ஜனவரி 22ஆம் முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் அடிப்படையிலேயே சட்டமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்போம் என்றார்.

You'r reading ஐந்து நாள் ஆலோசனை. அப்புறம்தான் அறிவிப்பு : சரத்குமார் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருப்பதி கோயிலில் ஜனவரி மாத தரிசன டிக்கெட்டுகள் : இணையதள பதிவு இன்றுமுதல் துவக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்