கருணாநிதியிடம் வாழ்த்து பெற்று சென்ற உதயநிதி (வைரல் வீடியோ)

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்திருந்த திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவதற்காக வாழ்த்து பெற்று சென்ற வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி முக்கொம்பில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் பயணத்தை தொடங்கினார். இவருக்கு வழ எங்கும் கிராமங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காவிரி மீட்டு பயணத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். திமுக தலைவர் கருணாநிதியில் கருப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்று மாலை கமலூரில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில், மு.க.ஸ்டாலின், இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது, “கடலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தான் கலந்துக் கொள்ளப்போகிறேன். அப்பாவும் அங்கே தான் சென்றிருக்கிறார். அனைத்து பொதுக்கூட்டத்திலும் அப்பா தங்களை பற்றி தான் பேசுகிறார். அதை நீங்கள் டிவியில் பார்த்தீர்களா ? ” என்று கேட்டார். அதற்கு, கருணாநதி சிரித்தபடி தலையை ஆட்டினார்.

இந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதே அந்த வீடியோ..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கருணாநிதியிடம் வாழ்த்து பெற்று சென்ற உதயநிதி (வைரல் வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முழங்கையில் உள்ள கருமையைப் போக்க என்ன செய்யலாம் ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்