தைலாபுரத்தில் நடந்தது என்ன?

அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் இன்று சந்தித்து பேசினர். வெளியில் இதற்கு வேறு காரணம் சொல்லப்பட்டாலும் கூட்டணியை இறுதி செய்யவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் இன்று காலை சந்தித்தனர்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் வன்னியருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசப்பட்டது என்று சொன்னாலும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த மாதம் 22-ந்தேதி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் ஆகிய இருவரும் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினர். இந்தமுறை அன்பழகனுக்கு பதில் வேலுமணி ராமதாசை சந்தித்திருக்கிறார்.

20 சதவீத தனி இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு எடுப்போம் என பா.ம.க அறிவித்திருந்தார். நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பாமக 30 இடங்களை கேட்டதாகவும் அதிமுக தரப்பில் 22 இடங்களை தருவதாக சொல்லப்பட்டு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

You'r reading தைலாபுரத்தில் நடந்தது என்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் தனது இடத்தை துண்டு போட்டு பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்