அதிமுக கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது போலீசில் புகார்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக நிர்வாகிகள் இருவர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

கடந்த 31ம் தேதி பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பயணம் செய்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அதிமுக வட்டாரத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு சசிகலாவிற்கு உரிமையில்லை
அது சட்டப்படி தவறு என்று தெரிவித்தார்.ஆனால் டிடிவி தினகரனோ அவர்தான் கட்சியின் பொதுச்செயலாளர் ஆதலால் அவர் கொடியை பயன்படுத்துவது தவறு இல்லை என்ற ரீதியில் மறுப்பு தெரிவித்திருந்தார்.சட்ட அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதா அதிமுக கொடியை பயன்படுத்தினால் அவரது மீது வழக்கு தொடருவோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சேலத்தை அடுத்துள்ள கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம் , வட்டச் செயலாளர் விநாயகம் ஆகியோர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சசிகலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்சசிகலா , அதிமுகவின் கொடியை பயன்படுத்துகிறார். சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் .ஆனால் அவர் தந்து காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார் .இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தங்களது புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். சசிகலா மீது சேலம் மாநகர போலீசில் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading அதிமுக கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது போலீசில் புகார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருப்பதி கோவிலில் சுற்றுலாத்துறை மூலம் சிறப்பு தரிசனம் இன்று முதல் மீண்டும் துவக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்