ஒரே நாளில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ்..! இப்படியே போனால் தமிழகம் தாங்குமா??

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நேற்று வெளியிடப்பட்ட தகவலில் தமிழகத்தில் புதிதாக 15 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளதாக அதிகரித்துள்ளது.

அதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு 82 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாகவும், 11 ஆயிரத்து 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 180 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஒரே நாளில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ்..! இப்படியே போனால் தமிழகம் தாங்குமா?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தடுப்பூசி: இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்