4 டிஎம்சி காவிரி தண்ணீர்nbsp- தமிழகம் சார்பில் மனு தாக்கல்

4 டிஎம்சி தண்ணீர்nbsp- தமிழக சார்பில் மனுத்தாக்கல்

காவிரி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் விட கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது. மேலும் கர்நாடகா உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தது. அப்போதே கர்நாடகா சார்பில் 4 டிஎம்சி தண்ணீர் தர மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் மனுத்தாக்கல் செய்யபட்டது அதில் போதிய மழை இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத  நிலையில் உள்ளோம். தற்போது  கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது  என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 4 டிஎம்சி தண்ணீரை உடனே திறக்க வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 4 டிஎம்சி காவிரி தண்ணீர்nbsp- தமிழகம் சார்பில் மனு தாக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மணல் கொள்ளையை தடுக்க முயன்ற நெல்லை பொலிஸார் அடித்து கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்